பற்கள் பளபளக்கவில்லையே என்ற கவலை யாருக்கு தான் இல்லை. ஆனால், சிறிய வயதில் கண்டபடி பற்களை பராமரித்து விட்டு, திடீரென பளபளக்க வேண்டும் என்றால் கஷ்டம் தான். சிறிய வயதில் இருந்தே பராமரிப்பு முக்கியம். பற்களை பராமரிக்க இப்போது பல நவீன வழிகள் வந்து விட்டன. பல் நிபுணரிடம் போய், பற்களை சீராக்கி, பராமரிக்க துவங்கலாம். ப்ளீச்சிங், ப்ளாசிங் போன்ற முறைகளில் பற்களை முடிந்தவரை "பளபளக்க' செய்து, பராமரிக்கலாம்.
காலையில் பல் தேய்ப்பதே ஏதோ கடனுக்கு செய்வது தான் பலரும் செய்யும் தவறு. அதற்காக சில நிமிடம் ஒதுக்கி நன்றாக தேய்க்க வேண்டும்; அதற்காக அழுத்தி தேய்க்க வேண்டாம். இரவில் கண்டிப்பாக தேய்க்க வேண்டும்.
இனிப்புகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அப்படியே சாப்பிட்டாலும், பல் தேய்க்கும் போது, பற்களில் படிந்திருக்கும் அழுக்குகளை முழுமையாக நீக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு இரு முறை பல்தேய்ப்பது உதவும்.
நல்ல டூத் பேஸ்ட், நல்ல டூத் ப்ரஷ் முக்கியம். அதுபோல, சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பிஸ்கட், கூல் டிரிங்க் போன்றவற்றை குறைத்துக் கொண்டு பழங்களை, நார்ச்சத்து உள்ள காய்கறிகளை சாப்பிட்டால், பற்கள் பளபள தான்.
0 comments:
Post a Comment