அதென்ன எமோஷனல் ஸ்ட்ரெஸ்? எதற்கெடுத்தாலும் அழுவது, குமுறுவது, கண்கலங்க டென்ஷன் ஆவது தான். சிறிய விஷயமாக இருந்தாலும், கண்களில் இருந்து "பொல பொல...' தான். இளம் வயதில் ஆரம்பிக்கும் இது, வயதான பின்னும் தொடரும். ஆளுமை குணம் இல்லாதவர்களுக்கு தான் இது அடிக்கடி வரும்.

எதிராளி சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு யோசனை இருக்கும்; தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் தன் கருத்தை சொல்லும் தைரியம் சிலருக்கு தான் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பிரச்னை வராது.


எதையெடுத்தாலும், மனதில் போட்டு அழுத்தி வைத்திருந்து, கடைசியில் குமுறுவது தான் இப்படிப் பட்டவர்கள். இவர்கள் சரியாக வேண்டுமானால், மனோதத்துவ நிபுணரை ஆலோசிப்பது தான் நல்லது. கம்ப்யூட்டர் காலகட்டத்தில் இருக்கும் இப்போதைய இளம் தலைமுறையினருக்கு அசாத்திய திறமை இருந்தாலும், இப்படிப்பட்ட உணர்வுபூர்வ ஸ்ட்ரெஸ் இருக்கத்தான் செய்கிறது என்பது டாக்டர்களின் கருத்து.