sd

sdsd

fgfg

fgfg

ஸ்டஃப்டு டமாட்டர்
தேவையானவை: தக்காளி - 10, பொட்டுக்கடலை - 50 கிராம், வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 50 கிராம், தேங்காய் துருவல் - கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் - சிறிதளவு
செய்முறை: பொட்டுக்கடலை, வேர்க்கடலை, தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் எல்லவற்றையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் நீர் விட்டுக் கெட்டியாக அரைக்கவும். தக்காளியை நன்கு கழுவி, அதன் மேல் பக்கத்தில் கீறவும். அதற்குள் அரைத்த கலவையை வைத்து, மேலே நறுக்கிய கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.
குறிப்பு: இதை அடிக்கடி செய்து சாப்பிட ரத்த சோகை விலகி, இளமை மேம்படும். உடல் தொப்பை, கொலஸ்ட்ரால், அதிக உடல் எடையை சரிசெய்யும்.

இஞ்சி ஜாம்
தேவையானவை: தேன் - அரை கிலோ, இஞ்சி - அரை கிலோ, பேரீச்சை - 250 கிராம், பனங்கற்கண்டு - 200 கிராம்.
செய்முறை: இஞ்சியை தோல் நீக்கிக் கழுவி, பொடிப் பொடியாக நறுக்கவும். ஒரு பாட்டிலில் தேன் விட்டு அதில் நறுக்கிய இஞ்சியை ஊற வைக்கவும். பேரீச்சையைக் கழுவி, கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும். நறுக்கிய பேரீச்சை, பனங்கற்கண்டு ஆகியவற்றை தேனில் ஊறும் இஞ்சியுடன் கலக்கவும். அந்த பாட்டிலின் வாயை மெல்லிய காட்டன் துணியால் கட்டவும். இதனை, ஒருவாரம் வெயிலில் வைத்து எடுத்து, சாப்பிடவும்.
குறிப்பு: வயிற்று வலி, வயிற்று பூச்சி, ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், சளி, இருமல் தொல்லைகளுக்கு சிறந்தது இஞ்சி ஜாம்.

தக்காளி\அவல் ஜீமிக்ஸ் மீல்ஸ்
தேவையானவை: அவல் - 600 கிராம், தக்காளி - 2 கிலோ, தேங்காய் துருவல் - ஒரு கப், வெங்காயம் - 2, மிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பூண்டு - 3 பல், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பிளாக் சால்ட் - தேவையான அளவு.
செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து.. தண்ணீர் விட்டுக் கழுவி வடிகட்டவும். தக்காளியை நன்றாகக் கழுவி மிக்ஸியில் போட்டுக் கெட்டியாக அரைத்து... சாறு எடுத்துக் கொள்ளவும். அல்லது தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய அவல், தக்காளிச் சாறு அல்லது தக்காளித் துண்டுகள், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, நசுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள், முந்திரி, பிளாக் சால்ட் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதற்குத் தொட்டுக் கொள்ள பச்சடி ஏற்றது.
குறிப்பு: மதிய உணவாக இதனை எடுத்துக் கொள்ளலாம். குறைந்த கலோரி உணவு இது.

இயற்கை ரசம்
தேவையானவை: தக்காளி - அரை கிலோ, ரசப்பொடி - ஒன்றரை டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, தோலுரித்த பூண்டு - 5 பல், பிளாக் சால்ட் - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை நன்கு கழுவி, அரைத்து சாறு எடுத்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தோலுரித்த பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் ரசப்பொடி, சீரகத்தூள், மிளகுத்தூள், பிளாக் சால்ட் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை தக்காளிச் சாறுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்க... இயற்கை ரசம் ரெடி!
குறிப்பு: தக்காளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு அல்லது புளிக்கரைசல் உபயோகித்தும் செய்யலாம்.

பீட்ரூட் ஊறுகாய்
தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப், இஞ்சி - 100 கிராம், எலுமிச்சம்பழம் - 10, இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி, கொட்டை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு சாறுகளையும் ஒன்றாகக் கலந்து, அதில் பீட்ரூட் துருவல், இந்துப்பு சேர்த்துக் கலந்து... 10 நிமிடம் ஊற வைக்கவும். இதே முறையில் கேரட்டிலும் செய்யலாம்.
குறிப்பு: இந்த ஊறுகாய்... ஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் போன்ற உபாதைகளை சரிசெய்யும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பு.

கொத்தமல்லி\அவல் மிக்ஸ் மீல்ஸ்
தேவையானவை: அவல் - 600 கிராம், தேங்காய் துருவல் - அரை கப், கொத்தமல்லி - ஒரு கட்டு, கறிவேப்பிலை - இரண்டு கைப்பிடியளவு, வெங்காயம், குடமிளகாய் - தலா 2, மிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 100 கிராம், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை கல் நீக்கிச் சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும். சுத்தம் செய்த கொத்தமல்லி, கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு அரைத்து... கெட்டியாக சாறு எடுக்கவும். குடமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
கழுவிய அவலுடன் அரைத்தெடுத்த கொத்தமல்லி - கறிவேப்பிலை சாறு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் முந்திரி, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய் துருவல், இந்துப்பு சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

நேச்சுரல் பிரியாணி
தேவையானவை: அரிசி அவல் - 250 கிராம், முளை கட்டி, உலர வைத்த கோதுமை - 250 கிராம், வெங்காயம் - 2, கேரட், தக்காளி - தலா 3, முட்டைகோஸ், பீன்ஸ், வெண்பூசணி, புடலங்காய், சௌசௌ - தலா 100 கிராம், வெள்ளரி - 2, உருளைக்கிழங்கு, குடமிளகாய் - தலா 1, மாதுளை முத்துக்கள் - அரை கப், முளைகட்டிய பாசிப்பயறு - 50 கிராம், முளை கட்டிய வேர்க்கடலை - 100 கிராம், முளைகட்டிய எள் - 50 கிராம், முந்திரி, திராட்சை - தலா 100 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பட்டை - 2, கிராம்பு - 3, ஏலக்காய் - 4, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு- 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், இஞ்சி - 50 கிராம், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, மிக்ஸியில் ரவையாக அரைக்கவும். முளைகட்டி உலர வைத்த கோதுமையையும் ரவையாக அரைக்கவும். ரவையாக அரைத்த அவல், கோதுமையை தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து... ஊற வைக்கவும். இஞ்சியைத் தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கவும். முந்திரி, திராட்சையைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும்.
ஒரு பாத்திரத்தில், ஊற வைத்த ரவையாக அரைத்த அவல், கோதுமையுடன் நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி, முளை கட்டிய தானியங்கள், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, மாதுளை முத்துக்கள், மிளகுத்தூள், சீரகத்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், எலுமிச்சைச் சாறு, இந்துப்பு அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கிளற... நேச்சுரல் பிரியாணி ரெடி!

ஸ்டஃப்டு பேரீச்சை
தேவையானவை: பேரீச்சை - அரை கிலோ, முந்திரி - 250 கிராம், தேன் - 200 கிராம்.
செய்முறை: முந்திரியை தேனில் ஒரு நாள் முழுவதும் ஊற விடவும். பேரீச்சையைக் கழுவி உலர விடவும். பிறகு, நீளவாக்கில் கீறி கொட்டையை மெதுவாக நீக்கி விடவும். கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சைக்குள் தேனில் ஊற வைத்த முந்திரியை ஸ்டஃப் செய்யவும். இதுபோல் ஒவ்வொரு பேரீச்சை யிலும் ஸ்டஃப் செய்ய வும்.
குறிப்பு: ரத்தசோகையை நீக்கும் நல்ல மருந்து இது. உடல் எடையை அதிகரிக்க விரும்புவர்கள் இதனை தினமும் சாப்பிடலாம்.

வெஜிடபிள் இட்லி
தேவையானவை: அவல் - அரை கிலோ, முளைகட்டி, உலர வைத்த கோதுமை - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒன்றரை கப், பிளாக் சால்ட் - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டி, உலர வைத்த கோதுமையை மிக்ஸியில் அரைக்கவும். அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, தண்ணீரில் ஊற விடவும். ஊறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கோதுமை, அவலுடன் தேங்காய் துருவல், பிளாக் சால்ட் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் மெல்லிய துணி விரித்து, இந்த மாவை இட்லி போல் விடவும். 10 நிமிடம் கழித்து... துணியிலிருந்து மெதுவாக இதனைப் பிரித்தெடுக்க... நேச்சுரல் இட்லி தயார். இதனுடன் காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.
குறிப்பு: இதற்குத் தொட்டுக்கொள்ள இயற்கை சாம்பார் ஏற்றது.

2 ஆழாக்கு முருங்கைக் கீரையை உப்பு போட்ட தண்ணீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 3 பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாய் இவற்றை பொடிப் பொடியாக நறுக்கி இரண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

லு லிட்டர் தண்ணீரை உப்பு போட்டு கொதிக்க விடவும்.இதில் ஒரு ஆழாக்கு அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரியான முறையில் கிளறவும். இதே கரைசலில் முருங்கைக்கீரையையும் சேர்த்து கிளறிக்கொண்டே வரவேண்டும்.கூழ் பதத்திற்கு இந்த கரைசல் வரும் வரை கிளற வேண்டும்.பின்னர் அரை டீஸ்பூன் பெருங்காயத் தூளை போட்டு சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.

வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் வேகவிடவும்.




ஒரு கப் வாழைப்பூவை சுத்தம் செய்து வேகவைத்துக் கொள்ளவும். லு கப் கடலைப்பருப்பை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், கால் டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், நறுக்கிய 2 பச்சை மிளகாய், உப்பு இவையனைத்தையும் கடலைப்பருப்பு, வாழைப்பூவுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையெனில் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொண்டு இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.

(ஆவியில் வேக வைத்து எடுப்பதால் B.P. உள்ளவர்களுக்கு நல்ல ஆரோகியமான உணவு.)






* வெங்காயம்

* பூண்டு

* வாழைத்தண்டு

* வாழைப்பூ

* சுரைக்காய்

* பீர்க்கங்காய்

* பார்லி

* சீரகம்

* வெந்தயம்

* பொரிக்காத வேகவைத்த மீன்

* வெள்ளைத்தாமரை

* மருதமரப் பட்டை

* மனம் விட்டுச் சிரிப்பது