இயற்கை ரசம்
தேவையானவை: தக்காளி - அரை கிலோ, ரசப்பொடி - ஒன்றரை டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, தோலுரித்த பூண்டு - 5 பல், பிளாக் சால்ட் - தேவையான அளவு.
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தோலுரித்த பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் ரசப்பொடி, சீரகத்தூள், மிளகுத்தூள், பிளாக் சால்ட் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை தக்காளிச் சாறுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்க... இயற்கை ரசம் ரெடி!
குறிப்பு: தக்காளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு அல்லது புளிக்கரைசல் உபயோகித்தும் செய்யலாம்.
0 comments:
Post a Comment