பீட்ரூட் ஊறுகாய்
தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப், இஞ்சி - 100 கிராம், எலுமிச்சம்பழம் - 10, இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி, கொட்டை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு சாறுகளையும் ஒன்றாகக் கலந்து, அதில் பீட்ரூட் துருவல், இந்துப்பு சேர்த்துக் கலந்து... 10 நிமிடம் ஊற வைக்கவும். இதே முறையில் கேரட்டிலும் செய்யலாம்.
குறிப்பு: இந்த ஊறுகாய்... ஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் போன்ற உபாதைகளை சரிசெய்யும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பு.