நேச்சுரல் பிரியாணி
செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, மிக்ஸியில் ரவையாக அரைக்கவும். முளைகட்டி உலர வைத்த கோதுமையையும் ரவையாக அரைக்கவும். ரவையாக அரைத்த அவல், கோதுமையை தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து... ஊற வைக்கவும். இஞ்சியைத் தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கவும். முந்திரி, திராட்சையைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும்.
ஒரு பாத்திரத்தில், ஊற வைத்த ரவையாக அரைத்த அவல், கோதுமையுடன் நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி, முளை கட்டிய தானியங்கள், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, மாதுளை முத்துக்கள், மிளகுத்தூள், சீரகத்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், எலுமிச்சைச் சாறு, இந்துப்பு அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கிளற... நேச்சுரல் பிரியாணி ரெடி!
0 comments:
Post a Comment