சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்கணுமா ?
'க்ளைசேமிக்' குறைவான உணவு சாப்பிடுங்க
நீங்க பெரும்பாலும், இட்லி - சட்னி பிரியரா? பொங்கல் - சாம்பார் பிரியரா? எதிலும் மிதமாகத் தான் இருப்பீர்கள் என்றால் ஓகே; முதலாவதில் தான் மூக்கு பிடிப்பவர் என்றால் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்.
இட்லி, சட்னியில் உள்ள 'க்ளைசேமிக்' சமாச்சாரங் களை விட, பொங்கல், சாம் பாரில் குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த 'க்ளைசேமிக்' ரசாயனம் தான், சர்க் கரை வியாதிக்கு அடிப் படையான காரணி.
சர்க்கரை அளவு, வழக்கத்தை விட, அதிகரித்து வந்தால், இட்லி, சட்னி மட்டுமல்ல, 'க்ளைசேமிக்' அதிகமுள்ள உணவுகளை, நொறுக்குத்தீனிகளை குறைத்துக் கொள்வது தான் நல்லது.
அதென்ன 'க்ளைசேமிக்?'
உணவுகளில் இருந்து ரத்தத் தில் சேரும் கார் போஹைட்ரேட் மூலம் உருவாகும் ரசாயன விளைவு தான் 'க்ளைசேமிக் இன்டெக்ஸ்' என்பது. சில வகை உணவுகளில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாக உள்ளது. சிலவற்றில் குறைவாக உள்ளது. உணவுகள் மூலம் உடலில் அதிக அளவு கார்போஹைட்ரேட் சேரும் போது, செரிமானம் அதிவேகத்தில் நடக்கும்; அப்போது கார்போஹைட்ரேட் சிதைந்து 'க்ளைசேமிக்' அதிக அள வில் க்ளூகோசாக மாறும். அதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
மிதமான கார்போஹைட்ரேட் இருக்கும் போது, செரிமானமும் மிதமாக நடக்கும்; கார்போ சிதைந்து க்ளூகோஸ் ஏற்படும் போது, அது நிதானமாக வெளியேறி விடும். அதனால், க்ளைசேமிக் உருவாகி, சர்க்கரை அளவை அதிகரிக்காது.
மிதமான அளவில் கார்போ ஜீரணிப்பதால், சர்க்கரை அளவும் குறைந்து, அதை கரைக்க, கணையத்தில் இருந்து இன்சுலின் சுரக்கும் தேவையும் குறைந்து விடுகிறது. இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
எப்படி கண்டு பிடிப்பது?
கார்போஹைட்ரேட் மற்றும் க்ளூகோஸ் சத்து கொண்ட 100 கிராம் உணவை சாப் பிட்ட 2 மணி நேரத்துக்கு பின் உடலில் ரத்தப்பரிசோதனை செய்தால், 'க்ளைசேமிக்' அளவு தெரிந்துவிடும். அது அதிகமாக இருந்தால், 'க்ளைசேமிக்' அதிகரிக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. மனித உடலில் இப்படிசெய்யும் பரிசோதனையில் பத்து வகையான அம்சங்களின் அடிப்படையில் 'க்ளைசேமிக்' அளவு கண்டுபிடிக்கப்படும்.
எது பாதுகாப்பானது?
'க்ளைசேமிக்' அளவில் பாதுகாப்பான அளவு என்பது வரையறுக்கப் பட்டுள்ளது; இதை நாமாக கண்டுபிடிக்க முடியாது; சர்க்கரை அளவை கண்டறிந்தால் தான், அதில் உள்ள 'க்ளைசேமிக்' அளவு கண்டறியப்பட்டு, டாக்டர் சில உணவு வகைகள் மட்டும் தவிர்க்க யோசனை சொல்வார். டிபன், சாப்பாடு மட்டுமின்றி, பாக்கெட் உணவுகள், நொறுக் குத்தீனிகள் வரை எல் லாவற்றிலும் 'க்ளைசேமிக்' அளவு உண்டு. அது மீறாமல் இருக்க டாக்டர் களை தான் ஆலோசிக்க வேண்டும். சர்க்கரை நோய் வரும் என்று நினைப் பவர்கள், வந்து விட்டவர்கள், இந்த விஷயத்தில் உஷாராக இருப்பது தான் மிக நல்லது.
70ஐ தாண்டக் கூடாது
* 'க்ளைசேமிக் இன் டெக்ஸ்' உணவுகள் சாப்பிடும் போது, 55 பாயின்ட் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* 55ல் இருந்து 70 வரை போனால், உஷாராகி விட வேண் டும் என்று பொருள்.
* எழுபதை தாண்டி விட்டால், கண்டிப்பாக சர்க்கரை கோளாறு அதிகரிக்கலாம்; சர்க்கரை நோய் வரலாம் என்பதற்கான அறிகுறி தான்.
உணவு வகைகள் எவை
கேக் வகைகள், ரொட்டி வகைகளில் இந்த 'க்ளைசேமிக்' உள்ளது. சாதாரண கேக்குகளில் 54 முதல் 62 பாயின்ட் வரை இந்த ரசாயனம் உள்ளது. சில வகை கேக்குகளில் அதிகபட்சமாக 80 தொடக்கூடிய அளவில் இது உள்ளது.
சோயா மில்க், ஆப்பிள் ஜூஸ், கேரட் ஜூஸ், பைனாப்பிள் ஜூஸ், திராட்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றில் 41 முதல் 52 வரை தான் 'க்ளைசேமிக்' உள்ளது.
ரொட்டிகளில், கோதுமை உட்பட தானிய வகை பிரட்களில் 48 பாயின்ட் அளவில் தான் 'க்ளைசேமிக்' உள்ளது. மற்ற பிரட் களில் அதிக பாயின்ட் தான் உள்ளது.
அரிசி, பார்லி கஞ்சி போன்றவற்றில் மிகக் குறைவாகத்தான் இந்த ரசாயனம் உள்ளது. அதிலும், இனிப்பு தயிரில் குறைவு தான்.
0 comments:
Post a Comment