'எங்களை கவனியுங்க ப்ளீஸ்!' வயிறு கேட்குது


"எங்களை கவனியுங்க ப்ளீஸ்!' வயிறு கேட்குது
மொபைல் போனை பார்த்து பார்த்து வாங்கும் அளவுக்கு, வீட்டை படாதபாடு பட்டு வாங்கும் அளவுக்கு உடல் ஆரோக்கியம் பற்றி எத்தனை பேர் கவலைப்படுகின்றனர் என்பது இப்போது பெரும் கேள்விக்குறி!
எதை வேண்டுமானாலும் சாப்பிடுவது என்ற கலாசாரம் இப்போது இளைய தலைமுறையினரிடம் மட் டு மல்ல, அதையும் தாண்டியவர்களிடமும் பரவி வருகிறது. அதனால் தான், சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு மட்டுமல்ல, பெயர் தெரியாத வியாதிகள் எல்லாம் வருகின் றன. புரியாத பெயர்களை சொல்லி, டாக்டர்கள் பயமுறுத்துகின்றனர்.
உணவில் தான்!: எல்லாவற்றுக் கும் அடிப்படை காரணம், நம் உணவில் தான் என்பதை புரிந்து கொண் டால் சரி. எதைச்சாப்பிட வேண் டும், எதை சாப்பிட்டால் வயிற்று உபாதையில் இருந்து ஆரம்பித்து, பல நோய்களுக்கு காரணமாகும் என்பதே தெரியாமல் தான் பலர் உள்ளனர். ஒரு முறை ஏதாவது கோளாறு வந்து விட்டால்போதும், அதுவும், சர்க்கரை வியாதி இருக்கிறது என்று டாக்டர் சொல்லி விட்டால் போதும், அவ்வளவு தான்; எதைச் சாப்பிட்டாலும் பயத்தோடு தான் சாப்பிடுவர். டாக்டர் சொல்லியபடி சாப்பிட்டு வந்தாலே போதுமே!
கவலையே கூடாது: நாற்பது வயதை தாண்டும் போதே, உடல் பரிசோதனையை செய்து கொண் டாலே போதும்; என்ன கோளாறு வரப்போகுது என்பது தெரிந்து விடும். அதன் அடிப்படையில் உணவில் மாற்றம் கொண்டு வந்தாலேபோதும் என்பது தான் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் சொல்வது. ஆனால், இப்போது முப்பது வயதிலேயே எல்லா கோளாறும் வருவதால் அந்த வயதிலேயே முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பட்ஜெட்டில் டாக்டர் பீஸ்: "நான் என் வாழ்க்கையில் மாத்திரை, மருந்தே எடுத்ததில்லை' என்று சொல்லிக்கொள்வது பெருமையல்ல; ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வருகிறேன் என்று சொல்ல தைரியம் உண்டா' என்று பார்க்க வேண்டும். ஆனால், பலரும் நாம் என்ன சாப்பிடுகிறோம், அது உடலுக்கு நல்லது தானா என் பதே தெரியாமல் தான் சாப்பிடுகின்றனர். தரமான உணவு, தரமான ஓட்டலில் சாப்பாடு, தரமான குடிநீர் என்பதற்கு எல்லாம் பொருள் கூட தெரியாமல் தான் பலரும் உள்ளனர். அதனால் தான் டாக்டர்களுக்கு மாத பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டியுள்ளது.
வயிறு எப்படியிருக்கு? வயிறு பற்றி தெரியுமா? அதன் வேலை பற்றி தெரியுமா? தெரிந்தால் ஒவ்வொருவரும் ஒழுங்காக வேளைக்கு சாப்பிடுவோம்; சரியான உணவை சாப்பிடுவோம். அப்படி சாப்பிடாமல் இருக்கும் போது தான் அது "வேலை' காட்டி விடுகிறது. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையே உள்ளது தான் உதரவிதானம்; இது ஒரு தசை. இதன் கீழ் உணவுக்குழாயில் இருந்து தான் வயிறு ஆரம் பிக்கிறது. அதன் கீழ் மறுமுனை, சிறுகுடலில் இணைகிறது. வயிற்றுக்குள் உணவு வந்து விழும் போதிலிருந்து, வாஷிங்மிஷின் போல இயங்க ஆரம்பித்துவிடும்.
அள்ளிப்போடுவீங்களா? ஜீரணத்துக்கு தேவையான அமிலம் சுரந்தபடி இருக்கும். சத்துக்கள் பிரிக்கப்படும்; அவை பல்வேறு உறுப்புகளுக்கு போகும். அப்படித்தான் எண்ணெய், சர்க்கரை போன்றவை அதிகமாகும் போது, ரத்தக்குழாயில் சேர்ந்து பாடாய்ப்படுத்துகின்றன. ஜீரணம் ஆவதற்கு ஏற்ப, நாம் சாப்பிடும் போது உணவை பற் களால் சுவைத்து, நொறுக்கி நிதானமாக சாப்பிட வேண்டும்; அள்ளிப் போட்டுக்கொள்ளக்கூடாது. அவசரமாகவும் சாப்பிடக்கூடாது. அதனால் தான், மலச்சிக்கல் முதல் பல்வேறு உபாதைகள்.
கண்டபடி, கண்ட நேரத்தில்:: ஒவ் வொன்றுக்கும் ஒரு நேரம் போல, ஜீரணத்துக்கும் நேரம் குறிக்கப்பட்டுள்ளது. கண்ட நேரத்தில் சாப்பிடவும் கூடாது; கண்டபடி எதை வேண்டுமானாலும் சாப்பிடவும் கூடாது. அப்படி சாப்பிட்ட போது தான் ஜீரண முறை மாறுகிறது; குடல் பாதிக்கிறது.
அதிக புரோட்டீன் சத்துள்ள உணவுகள் தான் ஜீரணிக்க தாமதம் ஆகும். சைவ உணவுகள் பெரும்பாலும், காய்கறிகள், தானிய வகை உணவுகள் எல்லாம் எந்த பிரச்னையும் இன்றி ஜீரணம் ஆகும்.
ஆரோக்கிய வயிறு: ஆரோக்கியமான வயிறு எது என்றால், எப்போதும் ஜீரண ஆசிட் சுரந்தபடி இருக்கும் வயிறு தான். அதாவது, சத்தான உணவு, நேரம் தவறாமல் உண்ணுவது போன்றவை தான் அதற்கு உதவியாக இருப்பவை. "பிசி'யாகி விடுகிறது; டென்ஷன் அதனால் தான் இப்படி, எப்போதும் டிராவலில் இருக்கிறேன்...என்று எந்த காரணம் சொன்னாலும், வயிற்றுக்கு அது தெரியாதே!
அப்படீன்னா...
* வீட்டில் சாப்பிடுவதில் உணவுகளில் பச்சைக்காய்கறிகள், கீரைகள் அதிகம் சேருங்கள்.
* நெய் ரோஸ்ட், பிஸ்கட்கள், ஐஸ்கிரீம் வேண்டாம் என்றில்லை; கட்டுப்பாடு தேவை.
* பாட்டில் ஜூசை விட, பழங் களை சாப்பிடும் பழக்கத்தை கண்டிப்பாக கடைபிடியுங்கள்.
* ஓட்டலுக்கு போங்க; வாரத் துக்கு ஒரு முறை; அதுவும் தரமான ஓட்டலாக பார்த்து.
* உழைப்பதற்கு நேரத்தை செல விடும் போது, சாப்பிட கண்டிப்பாக நேரம் தேவை.
* தூக்கத்தையும் விடக்கூடாது; ஆனால், சாப்பிட்டபின் அப்படியே படுக்கையில் விழக்கூடாது.
இதையெல்லாம் கடைபிடித்தால் எங்களிடம் வரவே வேண்டாம் என்பது தான் டாக்டர்களின் கருத்து!