மாணவர்களே உங்களுக்கு தான்
பொதுத்தேர்வு நெருங்கி விட்டது; பந்தய குதிரையில் பணம் கட்டிக் காத்திருப்பது போல, பல பெற் றோரும், தன் பிள்ளை அதிக மதிப்பெண் எடுக்க வேண் டுமே என்று தவியாய் தவித்துக் கொண்டு தான் இருப்பர்.
அதிக மதிப்பெண் எடுத்தால் தானே, எம்.பி.பி.எஸ்.,சிலோ, பி.இ., யிலோ எந்த கஷ்டமும் இல்லாமல் , தங்கள் கையையும் கடிக்காமல் "சீட்' கிடைக்கும் என்ற ஆதங்கம் தான் அவர்களுக்கு. ஆனால், பொதுத்தேர்வு என்று வந்து விட்டாலே, பல மாணவ, மாணவிகளுக்கும் "டென்ஷன்' ஆரம்பமாகி விடுகிறது. மாணவர் கள் பதட்டத்தை போக்க முதன் முறையாக மத்திய மேனிலைத் தேர்வு வாரியம் (சி.பி.எஸ்.இ.,) "சந்தோஷமாக தேர்வை சந்தியுங்கள்' என்று ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பதட்டம் போயே போச்சு:
அதைப் படித்தாலே, பல மாணவர்களுக் கும் பதட்டம் போய்விடும்; தைரியமாக தேர்வை சந்தித்து, நம்பிக் கையுடன் மதிப்பெண்ணை குவிப்பர். தேர்வு என்றாலே, பதட்டமில் லாத மாணவர்கள் தான் அதிக மதிப்பெண் எடுப்பர்; நன்றாக படிக் கும் சில மாணவர்கள் தவறுவதும் கூட நேரிட இது தான் காரணம். சிலருக்கு உணவுப்பழக்கம் தான் அவர்களின் படிப்பை பாழடிக்கிறது. இதற்காகவே, சி.பி.எஸ்.இ., இந்த அறிவிப்பை வெளியிட்டு, அதைச்சார்ந்த பள்ளிகளுக்கு அனுப்பியும் உள்ளது. மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப் பில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
* சத்தான உணவை சாப்பிடுங்கள்; கார்போஹைட்ரேட், வைட்டமின், கனிமசத்துக்கள், ப்ரோட்டீன்கள் கொண்டதாக இருக்கட்டும் அந்த உணவுகள்.
நோ காபி, டீ
* கண்டிப்பாக காபி,டீயை தேர்வு முடியும் வரை விட்டு விடுங் கள்; எப்போதுமே விட்டு விட்டால், நினைவாற்றல் அதிகரிக் கும். சத்தான பானங்களை குடிக்கலாமே!
*இதுவரை பிரெஞ்ச் ப்ரை சாப் பிட்டிருந்தாலும் பரவாயில்லை; இனி தினமும் ஆப்பிள் உட்பட பழங்களை சாப்பிடுங்கள்.
* மெமரி பில் என்ற பெயரில் நினைவாற்றலை அதிகரிக்க செய் யும் என்று கூறி விற்கப்படும் மருந்துகளை வாங்கி விழுங்காதீர்கள். கண்டிப்பாக இது மாறான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
* கடைசி நேரத்தில் "மக் அப்' செய்யத்தான் வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே புரிந்து கொண்டு படிக்காததால் இந்த பதட்டம் நேரும். ஆனால், இப்போதும் புரிந்து, ஓரளவு "மக் அப்' செய்தால் மறக்கமாமல் மனதில் நிற்கும்.
கண்விழித்தால் போதுமா
* ராத்திரியெல்லாம் விழித்திருந்து படித்து பலன் இல்லை. பட்டியலிட்டு அதன்படி படித்தாலே போதும். ஒரு முறைக்கு பல முறை தேர்வு எழுதும் பாணியில் எழுதிப் பார்த் தாலே போதுமானது. கண்டிப்பாக மதிப்பெண் கூடும்.
* மனதில் உள்ள டென்ஷனை போக்க வேண்டும்; அதற்கு பெற்றோர் தான் ஒத்துழைக்க வேண்டும்.
இப்படி பொதுத் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது. பள்ளிகளில், பதட்டமான மாணவர்களுக்கு நம்பிக்கையூட்ட "கவுன்சலர்'களை நியமிக்கும்படியும் நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment